இன்றைய நவீன காலகட்டங்களில் பணம் சம்பாதிப்பதற்கு ஆகவும், சேர்த்து வைப்பதற்காகவும் வாழ்வில் சிக்கனம், சகிப்புத்தன்மை அதிகரிப்பு ஆகியவை மூலம் டிப்ரஷன் அதனால் நோய்கள் என பல பிரச்சினைகள் பல குடும்பங்களை ஆக்கிரமித்து வருகின்றன. வாழப் போவது என்னவோ கொஞ்ச நாள். அதுவும் இன்றைய நவீன காலகட்டங்களில் ரசாயன கலந்த உணவை தான் உண்ணுகிறோம். உணவே மருந்து என்கின்ற காலம் போய் உணவே ஸ்லோ பாய்சன் ஆகி வருகின்றது.
சம்பாதித்து சேர்த்து வைத்து அனுபவிக்காமல் இறப்பதற்கு பதிலாக தேவைப்படும் இடங்களில் செலவு, அழகிய ஞாபகம் நிறைந்த நல்ல வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துங்கள். நீங்கள் எவ்வளவு காசு பணம் சேமித்து வைத்தாலும் இவை தரும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது. உலகமே அறிந்த ஜாக்கிஜான் கூட அவர் சம்பாதித்த பணத்தை முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி, தன் மகனுக்கு போதிய படிப்பை அளித்துள்ளேன். அவன் அவனாக செயல்பட்டு பிழைத்துக் கொள்வான் என்று கூறி அனைவரையும் நெகிழ்ச்சிப் படுத்தியுள்ளார்.
எவ்வளவு சம்பாதித்தாலும் கொடுப்பதில் உள்ள மனநிறைவு வேறு எதிலும் கிடைக்காது. இதை மனதில் கொண்டு தான் அவர் இவ்வாறு செயல்பட்டு உள்ளார். அதனால் அவர் மகனும் அவர் வாழ்க்கையை நலமுடன் வாழ, முன்னேற்ற தொடர்ந்து செயலாற்றுவார். சொத்து உள்ளது என்ற கர்வமும் அவருக்கு கிடைக்காது. எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் ஒரு எட்டடி! அல்லது ஒரு மண் குடுவை! அவ்வளவுதான் வாழ்க்கை! எதிர்கால சன்னதிக்கு சேர்த்து வைக்கிறோம் என்று நடப்பு வாழ்க்கையை டிப்ரசனுக்கு கொண்டு செல்ல வேண்டாம். மகிழ்ச்சியோடு வாழுங்கள் என்று சமீபத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் நடப்பில் உள்ளவை என்பதால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.