கேஸ் நிறுவனங்களின் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர்களை பெறக்கூடியவர்கள் 2 வகையாக பிரிக்கப்படுகின்றனர். ஒரு கேஸ் இணைப்பை மட்டும் பெற்றிருக்க கூடியவர்கள் அல்லது இரண்டு கேஸ் இணைப்புகளை பெற்றிருக்க கூடியவர்கள்.
ஒரு கேஸ் இணைப்பை மட்டும் பெற்று இருக்க கூடியவர்கள் தங்களுடைய கேஸ் சிலிண்டர் முழுவதுமாக தீர்ந்த பின்பு தான் மற்றொரு கேஸ் சிலிண்டரை புக் செய்ய முடியும். ஆனால் இரண்டு கேஸ் இணைப்புகளை பெற்றெடுக்கக்கூடியவர்கள் தங்களுடைய கேஸ் சிலிண்டர் தீர்வதற்கு முன்பாகவே மற்றொரு கேஸ் சிலிண்டரை பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது ஒரு வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் மட்டுமே பெற முடியும் என்றும் இரண்டு கேஸ் இணைப்புகளை கொண்டவர்களுக்கு அதற்கு மேல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்யும் பொழுது , ” அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் காஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள் ” என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் எஸ் எம் எஸ் வருவதாக இல்லத்தரசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியன் ஆயில் தரப்பில் இவ்வாறு செய்யப்படுவதற்கு காரணமாக, வீட்டு உபயோகச் சொல்கின்றர்களை முறைகேடாக வேறு ஏதேனும் செயல்களுக்கு பயன்படுத்துகின்றன வா அல்லது உண்மையில் வீட்டிற்கு தான் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்காக இதுபோன்ற நடைமுறைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை வீட்டு பயன்பாட்டிற்கு சிலிண்டர் தேவை என்ற பட்சத்தில் நேரடியாக சென்று கேஸ் நிறுவனங்களில் கடிதம் எழுதிக் கொடுப்பதன் மூலம் 16 வது கேஸ் சிலிண்டரை பொதுமக்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.