ரிசர்வ் வங்கி இதற்கு முன்னர் தங்க நகை கடன் குறித்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தங்க நகை கடன் பெற வேண்டும் என்றால் நகை என்னுடையது என்ற ரசீது காட்ட வேண்டும். மேலும் வருட முடிந்து நகையை திருப்பும் போது முழுமையான தொகை செலுத்தி திருப்ப வேண்டும். முழு தொகையை செலுத்திய பின்னரும் நகையை ஒரு வாரம் சென்று தான் வங்கி மீண்டும் நகையை உரியவரிடம் கொண்டு போய் சேர்க்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். அதிருப்தி காரணமாக ரிசர்வ் வங்கிக்கு தொடர் எதிர்ப்பு வந்திருந்தது.
இந்நிலையில் மறு பரிசினை செய்து மீண்டும் சமீபத்தில் ரிசர்வ் வங்கி அதன் பாலிசிகளை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி தங்க நகை கடன் பெறுவதற்கு உரிய ரசீது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இனி கிடையாது. மேலும் ஆண்டு முடியும் வேளையில் முழு தொகையை செலுத்த தேவையில்லை. அந்த வருடத்திற்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும் முழு தொகையை கொடுத்து நகையை மீட்க வருபவர்களுக்கு உரிய நேரத்தில் நகையை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை ஒப்படைக்க தவறினால் கடன் வாங்கியவருக்கு நாள் ஒன்றுக்கு 5000 ரூபாய் வங்கி வழங்க வேண்டும். மேலும் அவர் வழக்கு தொடரவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தங்க நகை வைக்கும்போது வீட்டு வருமானச் சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் தகர்த்தப்பட்டுள்ளது. அனைவரின் கோரிக்கையை கேட்டு ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்து இந்த முடிவை வழங்கியிருப்பது அனைவர் மத்தியிலும் வரவேற்பை தருகிறது.