அரசு ஊழியர்களுக்கு ரெஸ்ட்!! ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பும் பணி தீவிரம்!! 

Rest for government employees!!

தமிழ்நாட்டில் பணிபுரியும் பல்வேறு அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் என 8,144 பேர்  இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகிறார்கள்  .திண்டுக்கல் மாவட்டத்தில் 18 காவல்துறையினர் இன்று ஓய்வு பெறுகின்றனர். அது மட்டுமின்றி சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 அரசு ஊழியர்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர். அரசு ஊழியர்களின் வயது வரம்பு 58 லிருந்து 60 ஆக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த  மாதத்தில் அவர்கள் ஊதிய அடிப்படையில்  ஓய்வு பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று  பல அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். பெரும்பாலும் ஆசிரியர்கள் மே மாதம் தான் பணி  நீக்குவார்கள் மாணவர்கள் படிப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் இம்முடிவை எடுக்கிறார்கள். பெரும்பாலும் அரசு பணிகள் மே மாதத்தில்தான் நியமிக்கப்படும் ஆகையால்தான் இந்த  மே மாதத்தில்  இன்று  மட்டும் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். தற்போது 9,42,941 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழக அரசின் சுமார் 7,33,000  பேர் ஓய்வு ஊதியம் பெறுகின்றனர். பல்வேறு துறையில் மக்களுக்கு பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய  வயது 58லிருந்து 60 ஆக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களாக பணியில் சேர்ந்த நிலையில் வயது வரம்பு மே 31 வுடன் நிறைவடைவதால் வீட்டுக்கு அனுப்புகிறது  தமிழக அரசு. ஏற்கனவே, தமிழக அரசின் அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 8,144 கூடுதல் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது, தமிழக அரசின் குரூப் ஏ தேர்வில் 424 பணியிடங்கள், குரூப்  -தேர்வில் 4,399 பணியிடங்கள் காலியாக உள்ளன.

குரூப் சி ல் 2,185 மற்றும் குரூப் டி 1,136 காலி பணியிடங்கள்  உள்ளன. அரசு தேர்வுக்கு முயற்சி செய்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நன்றாக படித்து அரசு பணியை பெற்றுகொள்ளுங்கள். மேலும், இது அரசு தேர்வுக்கு  காத்து கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இந்த பணியிடங்களைவிரைவில் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram