டெல்லி: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விவகாரம் குறித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வழி செய்வதாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
25 சதவீத இட ஒதுக்கீடு இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடுக்கான செலவை அரசே ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. கட்டாய கல்வி விவகாரம் தொடர்பாக ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு தமிழக அரசுக்கு நிதியை ஒதுக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டது. ஆனால் நிதி கிடைக்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழக அரசு அளிக்காமல் காலம் தாமதிக்க கூடாது என்றும், தகுந்த காலத்திற்குள் நிதியை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.
இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு குழு இன்று விசாரிக்க உள்ளது. தனது தரப்பு வாத கருத்தையும் கேட்க வேண்டும் என ஈஸ்வரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்று மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர்.


