மீண்டும் களமிறங்கிய ரிஷப் பண்ட்!! கே எல் ராகுலின் நிலை என்ன?? பயிற்சிக்கு வராத முக்கிய வீரர்கள்!!

Rishabh Pant is back

Cricket : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் ரிஷப் பண்ட் இடம் பெற்று இருந்தாலும் எந்த போட்டியில் விளையாடவில்லை தற்போது அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. நடந்து கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இது ஒரு விளையாடிய இரண்டு போட்டிகளின் வெற்றி பெற்று அரையறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. முதல் இரண்டு போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி முன்னேறியது. அடுத்தபடியாக இந்தியனின் கடைசி லீக் போட்டியான நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் பல குளறுபடிகள் நடந்து வருகிறது.

இந்திய அணியின் மிக முக்கிய வீரர்கள் ஒருவரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம்பெற்று இருந்தாலும் அவர் விளையாடிய இரு போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக கேஎல் ராகுல் செயல்பட்டு வருகிறார். முதல் போட்டியில் கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். கீப்பிங்கிலும் சிறப்பான முறையில் விளையாடுகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ரிஷப் பண்ணிட்டு இருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் சரியில்லாததால் போட்டியில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. தற்போது ரிஷபன் வலைப்பேச்சு ஈடுபட்டு கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதனால் கே எல் ராகுல் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது ரிஷப் பண்ட் மாற்று வீரராக களமிறக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது எனினும் கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து கே எல் ராகுல் தான் அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram