சூர்யா மிக பாசிட்டிவ் ஆக்டர். இவரது நடிப்பில் வெளிவந்த கங்குவா படம் எதிர்மறை விமர்சனங்களால் தோல்வி அடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வந்திருந்தார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். படம் வெளியாகி உலக அளவில் எதிர்பார்த்த அளவு ரெவென்யு கொடுக்காவிட்டாலும், குட் ரெவென்யூவை கொடுத்து இருந்தது. இதற்கிடையில் அவரது அகரம் நிறுவனம் ஆபீஸ் ஓபனிங்கையும் செய்து முடித்திருந்தார். அவ்வப்போது அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரம் செலவழிப்பதையும் அவர் திறம்பட கையாளுவார். அதற்கு சான்று அவருடைய குடும்ப உறுப்பினர்களோடு அவ்வப்போது உலா வரும் புகைப்படங்கள் தான்.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் இவர் நடிக்க கமிட் ஆகி பட வேலைகள் பரபரப்பாக தொடங்கி இருந்தது. அவ்வப்போது சூர்யா குறித்த தகவல்களும், ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வந்திருந்தது. தற்சமயம் இந்த படத்திற்கு, படக்குழுவினரால் போஸ்டர் உடன் கூடிய பெயர் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாவின் பின்னால் குதிரையுடன் கூடிய கருப்பணசாமி உருவமும், சூர்யா மடித்துக்கட்டிய வேஷ்டியுடன் கையில் மிக நீண்ட அருவாளையும், தனியாக ஒரு பெரிய அருவால் நிறுத்தவும் பட்டு உள்ளது. இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த படம் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் ஆர்.ஜே பாலாஜியின் இயக்கம் சிம்பிளாகவும், தனித்துவமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. ஆனால் இப்படத்தின் போஸ்டர் சிம்பிளாகவும் அதே நேரத்தில், அதை ஒரு முறை பார்த்தால் மக்கள் நினைவில் அது ஸ்டோரேஜ் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.