பாட்னா: பீகாரில் 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் போது மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு இருந்தபோது வனத்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அமைக்கப்பட்ட சாலை தற்போது வேடிக்கையாக பார்க்கப்படுகிறது. பீகார் மாவட்டத்தில் சாலையை விரிவு படுத்தும் திட்டத்தில் ஒரு பகுதி ஆகும். தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகனாபாத் சாலையில் நடுவே விபத்து ஏற்படும் வகையில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு இருந்தபோது வனத்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதனால் மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலையை விரிவாக்கம் செய்து 7.48 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை போடப்பட்டுள்ளது. கயா மாவட்ட நிர்வாகம் மரங்களை அப்புறப்படுத்த வனத்துறையை என் அனுமதி கேட்டிருந்தது. மரங்களை வெட்டினால் 35 ஏக்கர் நிலத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை வனத்துறை விதித்தது.
மாவட்ட நிர்வாகத்தால் வனத்துறை விதித்த நிபந்தனையை தர முடியாததால் மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. பாட்னா கயா பிரதான சாலைகளில் நடுவே மரங்கள் அப்படியே இருக்கும் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாலைகளின் நடுவே விபத்து ஏற்படும் வகையில் இருந்த மரங்களை அப்படியே விட்டு விட்டு ஏழு புள்ளி 48 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைகள் போட்டு இருப்பது தற்போது விமர்சனைக்கு உள்ளாகியுள்ளது.