கோப்பை எங்களுக்குதான் !!அசுர ஆட்டம் ஆடிய ரோஹித்!!

Rohit played a monster game

கிரிக்கெட் : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோகித் சர்மா.

நேற்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு விரைவாக கொண்டு சென்றார். இந்த போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கி நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 251 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்த இலக்கினை கருத்தில் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தொடக்க வீரராக களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவான ரன்களை அணிக்கு சேர்த்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்தின் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வார்களா அல்லது விக்கெட்டை இழப்பார்களா என ரசிகர்கள் அச்சத்தில் இருந்த நிலையில் ரோகித் சர்மா அதை தகர்த்தெறிந்தார்.

ரோகித் சர்மா தொடக்கத்திலே நிதானம் ஏதும் இல்லாமல் அதிரடியாக பவுண்டரி சிக்சர் என அடித்து பறக்க விட்டார். அவர் 83 பந்துகளை எதிர் கொண்டு 76 ரன்கள் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் 3  சிக்சர்கள் அடங்கும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 91 ஆக இருந்தது. சச்சின் ரவீந்திர வீசிய பந்தில் இறங்கி வந்து அடிக்க முயன்ற ரோகித் சர்மா ஸ்டம்பிங் விக்கெட் ஆனார். அதன்பின் களம் இறங்கிய முக்கிய வீரர்களும் நிதானமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் கோப்பை வெற்றி பெறச் செய்தனர் இதன் மூலம் ஐசிசி டிராபித் தொடரில் மூன்றாவது முறையாக இந்திய அணி வெற்றி பெற்று  சாதனை படைத்துள்ளது

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram