கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோத உள்ளது இதற்குப் பின் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதலாவதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி வாய்ந்தது அரையருவி இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவா அல்லது நியூசிலாந்து இரு அணிகள் இந்திய அணியுடன் மோதும் அணி எது என மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்திய அணியுடன் மோத உள்ளது.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றாலும் வெல்லாமல் விட்டாலும் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அறிவிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சி செய்து வருகிறார் ஆனாலும் பெரிய ரன் ஏதும் அடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து தடுமாறுகிறார்.
இவர் கடைசியாக ஒரு நாள் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி உடனான ஒரு நாள் போட்டியில் சதம் விளாசினார். அதன் பின் இந்த தொடரிலும் அவர் சுறுசுறுப்பாக அதிரடியாக ஆட்டத்தை தொடங்குகிறார் ஆனால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறார். இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு வருகிற ஏப்ரல் மாதம் வயது 38 ஆக உயரும். அதனால் அடுத்தடுத்து ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட அவரது வயது ஒத்துழைக்கவில்லை மேலும் அவரது உடல் தகுதியும் கை கொடுக்கவில்லை எனவே கூறலாம். எனவே இந்த இறுதி போட்டியில் விளையாடி முடித்த பின் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஜடேஜா டி20 உலக கோப்பை முடிந்த பின் கோப்பையை வென்று மூவரும் டி20 தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் இந்தக் கோப்பை வென்ற பின் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வ ஓய்வு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.