கிரிக்கெட்: சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு பின் ரோகித் சர்மா உண்மையிலேயே ஓய்வு பெறப் போகிறாரா??
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாயில் நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே நடைபெற்ற முடிந்தது இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பை தட்டி தூக்கியது. இதன் மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் ஆப் இன் மூன்றாவது கோப்பையை வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை அவர் ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துக்கள் அதிகமாக பரவிய நிலையில் சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டி முடிந்த பின் ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து ஓய்வு அளிக்க உள்ளார் என கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றிக்கு பின் செய்தி அவர்களை சந்தித்த ரோகித் சர்மா அதற்கான பதிலை கூறியுள்ளார். இது குறித்து பேசுகையில் அவர், இந்த ஒரு நாள் போட்டி தொடர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று வரும் செய்தி வெறும் வதந்தியே அதை யாரும் நம்ப வேண்டாம் அதை நீங்கள் கடந்து செல்லுங்கள். நான் தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என மகிழ்ச்சியான செய்தியை நகைச்சுவையுடன் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக கூறியுள்ளார்.





