மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரை நிறுத்துவதற்கான தேதி மற்றும் இடத்தை அறிவித்தது ரஷ்யா. தேதி மற்றும் இடம் குறித்த தகவல்களை உக்ரைனுக்கு ரஷ்யா தூதுக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி உறுதிபடுத்தியுள்ளார். கடைசியாக இரு நாட்டினருக்கு நடந்த பேச்சுவார்த்தை எந்த ஒரு பலனும் அளிக்காத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
உக்ரைன் தங்கள் நாட்டின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் ராணுவ உடையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அதிபர் புதின் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய நிலையில் புதின் கலந்து கொள்ளவில்லை. அதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 1 மணி நேரம் 40 நிமிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
1000 கைதிகள் பரிமாற்றம் மட்டுமே நடந்தது. டிரம்ப் போன்ற தலைவர்கள் போரை நிறுத்த வலியுறுத்திய நிலையில் தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனின் சில பகுதிகளான கெர்சன், டொனேட்ஸ்க், லுஹான்ஸ்க், ஜபோரிஜியா போன்ற பகுதிகளை 2022 ல் கைப்பற்றியது.
கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை ரஷ்யா பகுதிகளாக அறிவிக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் நேட்டோவில் இணைய கூடாது என ரஷ்யா வலியுறுத்தியது. மேலும், டி-மிலிட்டரைசேஷன், டி-நாசிஃபிகேஷன் போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மறுப்பு தெரிவித்த உக்ரைன் போர் குற்றம் விசாரிக்கவும், பின் காலத்தில் எந்த ஒரு பகுதிகளையும் கைப்பற்ற கூடாது என்றும் உத்தரவாதம் கொடுக்கும் படியும் உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.





