மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈராக் போன்ற நாடுகள் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் நெருக்கடி ஏற்படும் சூழல் நிலவியது.
இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியாவின் நீண்ட கால நண்பனான ரஷ்யா உதவிக் கரம் நீட்டியுள்ளது. அதன்படி, ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்ட 9.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் தற்போது இந்தியக் கடல் எல்லைக்குள் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலத்தைத் தந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிலிருந்து வந்துள்ள இந்த பிரம்மாண்ட எண்ணெய் இருப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், ரஷ்யாவின் இந்தத் துரித நடவடிக்கை இந்தியாவிற்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளதோடு, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயருவதைத் தடுக்கும் எனத் தெரிகிறது. சர்வதேசப் போர் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ரஷ்யா இந்தியாவுடன் வைத்துள்ள இந்த உறவு, உலக நாடுகளிடையே உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.


