நாளை சபரிமலை மகரஜோதி!! இன்று 30,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. மலையில் குவியும் பக்தர்கள்!!

Sabarimala Makaravilakku, Iyyappan Temple, Makar Jyothi Live.

நாளை பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு தரிசனம் சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்.

சபரிமலை: மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின் சிகர நிகழ்வான மகரஜோதி தரிசனம் நாளை (ஜனவரி 14, புதன்கிழமை) நடைபெறுகிறது. இதைக் காண்பதற்காகத் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

இன்றைய முக்கியக் கட்டுப்பாடுகள்:

தரிசனக் கட்டுப்பாடு: மகரஜோதி முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு கருதி, இன்று (ஜனவரி 13) ஒரு நாளில் மட்டும் 30,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளது.

பம்பை டூ சன்னிதானம்: பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்குச் செல்வது முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜோதி தெரியும் இடங்களான பாண்டித்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் இப்போதே இடம்பிடித்துக் காத்திருக்கின்றனர்.

திரவாபரண ஊர்வலம்: பந்தளம் அரண்மனையிலிருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய ஊர்வலம் இன்று மாலை சரங்குத்தி வந்தடைகிறது. நாளை மாலை இவை சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கூட்ட நெரிசலைத் தவிர்க்க 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். அவசரச் சிகிச்சைக்காகப் பத்து இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை மாலை சூரியன் மறையும் நேரத்தில், பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சியளிப்பார். அதைத் தொடர்ந்து ‘மகரவிளக்கு’ ஏற்றப்படும்

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram