சாய் பல்லவி மிக எளிமையாக மற்றும் கவர்ச்சி முற்றிலும் காட்டாத முன்னணி நடிகைகளுள் ஒருவர். அவர் நடித்த பிரேமம் படம் முதல் அமரன் படம் வரை அவருடைய எளிமை நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். அவர் கடைசியாக தமிழில் நடித்த அமரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளை பின்னுக்கு தள்ளி முன்னேறி வந்தவர்.
அவர் தற்போது நடித்து முடித்துள்ள ஏக் தீன் என்கிற ஹிந்தி படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்திருந்தனர். மேலும் அதைத் தொடர்ந்து அவர் ஹிந்தியில் ராமாயண படத்திலும் சீதை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த ஏக் தீன் திரைப்படம் ஹிந்தியில் அவருக்கு முதல் திரைப்படம் ஆகும். இதில் அவர் பிரபல நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கானுடன் இணைந்து நடித்துள்ளார். இது ஒரு காதல் திரைப்படம். எனவே ரசிகர்கள் மேலும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படம் வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளியீடிற்காக எடிட்டிங் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பட குழு இந்த படம் வெளியீடு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்த படம் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று வெளியிடப்பட்டுள்ளது. இவர் தற்சமயம் ராமாயண படத்தில் சீதை கதாபாத்திரத்தில் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.