தாயின் கஷ்டங்களை பற்றி கூறி கண்கலங்கிய சைந்தவி!! உணர்ச்சிபூர்வமான தருணங்கள்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டு வரும் பிரபல பாடகி சைந்தவி, சமீபத்திய ஒரு எபிசோடில் மிக உருக்கமான தருணத்தால் அனைவரையும் நெகிழச் செய்தார். ஒரு பெண் போட்டியாளரின் வாழ்க்கை சம்பவம் அவரது கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தது மட்டுமல்ல, நிகழ்ச்சியில் உள்ள அனைவரின் மனதையும் புரட்டிப் போட்டது. அந்தப் போட்டியாளர் தனது கணவரை சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இழந்தார். அந்த நேரத்தில், அவர் தங்களுடைய மகளுக்காக பிறந்தநாள் உடை வாங்கப் போய் திரும்பி வராததை பகிர்ந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குள் வந்த அவரின் நோக்கம், தனது கணவரின் கனவுகளை நிறைவேற்றுவதும், தன் குழந்தைக்காக ஒளிரும் எதிர்காலம் உருவாக்குவதுமே. இந்தக் கதையை கேட்டதும், சைந்தவி கண்கலங்கி, தன் அனுபவங்களும், தாயாக அவர் சந்தித்துள்ள சோக தருணங்களும் நினைவுக்கு வந்தன. என அவர் கூறியது மிகவும் உருக்கமானது: “நான் இந்த குழந்தையின் அம்மாவின் கதையை கேட்டதும் உள்ளம் உடைந்தது. குழந்தைக்கு டிரஸ் வாங்கிக்கொடுக்க போனவர், திரும்பி வராமல் போனார். ஆனால் இன்று இந்த குழந்தைக்கு, சரிகமப செட்டில் இத்தனை பேரின் அன்பு கிடைக்கிறது. நாமெல்லாம் இப்போது இந்த குழந்தையின் குடும்பமே. ஜிவி பிரகாஷுடன், திருமணமான சைந்தவி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த வருடம் விவாகரத்து செய்திருந்தாலும், அவர்கள் பெற்ற ஆத்வி என்ற மகளின் மீது கொண்ட பாசம் குறையவில்லை. ஒரு தாய் என்கிற அடையாளம் தான் சைந்தவியை இன்னும் பூரணமாக நிரப்புகிறது என்பதற்கேற்ப, அந்த நிகழ்ச்சியில் சைந்தவியின் பேச்சுகள் ஒரு தாயின் இதயத்தை பிரதிபலித்தன. சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள்,

“ஒரு தாயின் உணர்வுகளை சைந்தவி எவ்வளவு உண்மையாய் வெளிக்கொண்டு வந்துள்ளார்!”

“சரிகமப மேடை ஒரு இசை மேடையென்றாலும், இன்று அது உணர்வுகளின் குடும்பமாக மாறியுள்ளது, எனக் குறிப்பிட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி சாமான்ய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை வெளிக்கொண்டு வரும் ஒரு உணர்ச்சித் திரை. ஒருவரின் கனவுகள், இன்னொருவரின் துணிச்சலால் தொடர்ந்து முழுமையடைவதைப் போல, இந்த நிகழ்ச்சி தமிழர்களின் இதயத்தில் இசையோடு இணைந்து உணர்வுகளும் ஒலிக்கிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram