Salem: சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் காரில் சென்று கொண்டிருந்தபோது கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டின் கொலை கொள்ளை கற்பழிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டும் அல்லாமல் இரவு பகல் என்று பாராமல் ரவுடிகள் சண்டை இட்டுக் கொள்வதும் கும்பலுக்கு கும்பல் மாற்றி மாற்றி கொலை செய்வதும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. மேலும் பாலியல் தொல்லை என்பதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் சேலத்தில் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஜான் என்கின்ற சாணக்கியன் இவரின் மனைவி ஆதிரா திரு தம்பதியினரும் காரில் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து ஒரு மர்ம கும்ப கும்பல் அந்த ஜான் மட்டும் ஆதிரா தம்பதியினரை சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலேயே கணவர் ஜான் உயிரிழந்துள்ளார் அவரின் மனைவி ஆதிரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொலையை செய்துவிட்டு தப்பியோடும் முயன்ற மூன்று பேரை காவல்துறையினர் காலில் துப்பாக்கி சூடு நடத்தி மடக்கி பிடித்தனர். அவர்கள் தற்போது பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொலை வழக்கானது பழிக்கு பலியாக நடந்த ஒரு சம்பவமா என தீவிர விசாரணை செய்து வருகிறது. கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒரு ரவுடி பிரபல ரவுடி செல்லதுரையின் நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருப்பதாக காவல்துறைக்கு சந்தேகம் இருந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு சேலத்தில் பிரபல ரவுடி செல்லதுரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட ஜான் தொடர்புடையவர் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது இதனால் இது பழிக்கு பலியாக நடந்த ஒரு சம்பவமா என விசாரித்து வருகிறது காவல்துறை.