தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தனது அரசியல் களத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக அரசும் அடுத்தடுத்த பணிகளை செய்து வருகின்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற எதிர்மறையான பிரச்சனையைக் கூட கையாண்டு வந்திருந்தது. திண்டுக்கல் கலெக்டரிடம் அதற்குரிய வேலையை முதலமைச்சர் சீக்கிரம் செய்து முடிக்குமாறு கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேலம் வரவிருக்கிறார்.
நாளை மேட்டூர் அணையை திறப்பதற்காக சேலம் வர உள்ள அவர் இரண்டு நாட்கள் இங்கு தங்கி அங்குள்ள கட்சி உறுப்பினர்களை நேரில் சந்திக்க உள்ளார். சேலத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் போலீசார் அங்கு தகுந்த பாதுகாப்புகளையும், ரோடை மாற்றி அமைக்கும் மற்றும் சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சரின் வருகைக்கு, சேலத்தில் உள்ள திமுக தொண்டர்கள் பெரும் ஆர்வம் காட்டி அவரை வரவேற்க பல வழிமுறைகள் வகுத்து வருகின்றன. இது சேலத்தில் முதல்முறையாக 11 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கவிருக்கும் ரோடு ஷோ என்பதால் தொண்டர்கள் மிகுந்த ஆர்வமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.


