காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி விழாவைப் முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
இதன்படி, விழுப்புரம் – திருநள்ளாறு – நாகப்பட்டினம் இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் (Unreserved Special Trains) இயக்கப்படவுள்ளன. சனி பெயர்ச்சி விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு ரயில்கள் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாகத் திருநள்ளாறு மற்றும் நாகப்பட்டினத்தை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளன. முன்பதிவு தேவையில்லை என்பதால், சாதாரண டிக்கெட் பெற்று பக்தர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில், ரயில்வேயின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பயணிகளின் வருகையைப் பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


