சனி பகவான் என்றாலே பலருக்கும் பயம் தான்.
சனிபகவானால் பிடிப்பட்ட எவராயினும் திருநள்ளாறு சர்வேஸ்வரனையும் சனீஸ்வரனையும் தொழுதால் எல்லா தொல்லைகளும் நீங்கி நல்ல பலன்கள் பெறுவார்கள். திருக்கோயிலில் ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது இரண்டாம் பிரகாரத்தில் அம்பாள் சந்ததி தெற்கு கோபுரவாயில் உள்ளது இங்கு நந்தவனமும் உள்ளது காலம் தி நாதன் கோவிலும் அமைந்துள்ளது கிழக்கு கட்டை கோபுரவாயில் கற்பக விநாயகர் உள்ளார் மூன்றாம் பிறகாரத்தில் நகவிடங்க பெருமான் நந்தி மற்றும் 63 திருவுருவங்கள் அமைந்துள்ளது.
சிறிய மண்டபம் ஒன்றில் நலன் திரு உருவம் சிவலிங்க திரு மேனியும் உள்ளது 63வரும் எதிரில் தெற்கு வாயிலுக்கு அருகில் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது கன்னி மூலையில் ஸ்வர்ண நாய விநாயகர் அருளி உள்ளார் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி தனி சந்ததி சன்னதியும் உள்ளது இடது புறத்தில் இத்தளத்திற்கே சிறப்பான சனிபகவான் கட்டை கோபுரசுவரில் உள்ள மாடத்தில் எழுதிஉள்ளார்.
எப்படி எல்லாம் பிரார்த்தனை செய்வது அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டமசனி ஏழரைச் சனி, மங்கு சனி, பொங்கு சனி,பாத சனி,கண்டக சனி என்று எந்த வகையில் சனி தோஷங்கள் பிடிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் திருநள்ளாறு திருத்தலம் வந்து மூலவர் தர்பாரண்யேஸ்வரரையும் சனிபகவானையும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் சனிபகவானுக்கு தன் ஆலயத்திலேயே ஒரு மாடத்தில் இடம் கொடுத்து உள்ளனர்.
தன் பக்தர்களின் எல்லா வகையான சனி தோஷங்களில் இருந்தும் விடுபட நிவாரணம் அளிக்குமாறு இறைவன் தன் தர்பாரண்யேஸ்வரர் பணி அமர்த்தி இருப்பதால் முதலில் இவரை தரிசித்து விட்டு பின்பு தான் சனிபகவானை தரிசிக்க வேண்டும் எனவே ஒரு சனிக்கிழமை அன்று இத்திருத்தலம் வந்து நல தீர்த்தத்தில் முதலில் நீராடி பிறகு தர்பார்ண்யேஸ்வரர் மற்றும்அம்பிகை பொன்முறையாளையும் தரிசித்து அவர்களுக்கு நம் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு பிறகு சனிபகவான் சந்ததிக்கு வந்து அவருக்கு அபிஷேகம் செய்து கரும்பு வஸ்திரம் அணிவித்து கருங்குவலை அல்லது நீல சங்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
முடிந்தால் அவர் பாதங்களில் நீலக்கல் சமர்ப்பித்து பிறகு அதனை திரும்ப பெற்று ஒரு கருப்பு கயிற்றில் கோர்த்து ஆரமாக அணிந்து கொள்ளலாம் இது மிகவும் நன்மை தரும் அல்லது தங்க மோதிரத்தில் நீலக்கல்பதித்து இடது மோதிர விரலில் அணிந்து கொள்ளலாம் இதுவும் நல்ல பலன் தரும் முடிந்தால் ஆலயத்திலேயே சனீஸ்வர மந்திரங்களை ஓதி வன்னிச்சமித்தலினால் யாகத்தீக எழுப்பி எள்ளு தானியம் எள்ளு பொடி அன்னம் இரண்டையும் படைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து தூப, தீபம் காட்டி எள்ளுருண்டை அல்லது எள்ளால் செய்த பண்டம் எதையாவது நெய்வேத்தியமாக கொடுத்து பிரார்த்தனை செய்து கொண்டால் சனி கிரக தோஷம் முற்றிலும் நீங்கும் அவரவர் வீட்டில் சனிக்கிழமைகளில் எய்தீபமிட்டு சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டு வருவதும் சனி தோஷ பரிகாரங்களில் ஒன்றாகும்