சென்னை: 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை கூறியதாவது, ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்யவிருக்கும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுந்த காலி பணியிடங்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் அனுப்ப வருகிற 26 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.
மேலும் மனைவியை இழந்தவர்கள்,விதவைகள், மாற்றுத்
மேலும் மாவட்ட ஆட்சியரின் தலையீடு அதிகமாக இருந்தால் அதனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தெரிவித்துள்ளது. விருதுநகரில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் நேற்று (அதாவது 21.05.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல் நிலை ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை உறுதி செய்தல்,அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் கொண்டு நிறைவு செய்யப்பட்டது.
கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது அந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்ற நிலையை உறுதி செய்ய அரசு தரப்பில் தெரிவித்திருந்தது. ஆசிரியர்களுக்கு பணியிட கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் என்றும், நடந்து முடிந்த தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மறு தேர்வு எழுதும் கட்டணத்தை அரசே செலுத்தும் படியும்,+1மற்றும்+2 மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுக்கூட்டம் தன் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் பிரபாகரன் கூறியது, திமுக தனது ஆட்சியில் கூறிய வாக்குறுதியின் படி தனி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுக்குழுவில் தரப்பின் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என கூறினார்.