கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்துவிட்டு 50 அடி பள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவட்ட கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவரின் இளைய மகன் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் இவர் நேற்று உடல்நிலை சரியில்லை என பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். மாலை 4 மணியளவில் அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட நண்பர்களுடன் சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வரவில்லை.
மகன் காணவில்லை என்று அறிந்த பெற்றோர் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தனர். நடவடிக்கை எடுக்காததால் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையின் போது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது நிலையில் மர்ம நபர்கள் மாணவனை கடத்தி சென்றது தெரியவந்தது.
திருமுருக்கு கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் மாணவன் கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்டது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி மறியலில் ஈடுபட்டனர் உறவினர்கள். விரைவாக செயல்படாததால் இந்த சம்பவம் அரங்கேறியது என போராட்டம் நடத்தியதால் மாவட்ட எஸ்பி தங்கதுரை பேச்சுவார்த்தை நடத்தியது 4:30 மணிக்கு சடலத்தைப் பெற்று அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் தரப்பில் மாவனட்டி சேர்ந்த புட்டண்ணன் மகன் மாதேவன் மற்றும் மாரப்பன் மாதேவன் ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து பீர் வாங்கி கொடுத்து மயக்கம் அடைய செய்து பின் கொலை செய்துள்ளனர்.
விசாரித்த போது புட்டண்ணன் மகன் மாதவன் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்தது பார்த்துள்ளதாகவும் வெளியில் கூறிவிடுவார் என்று அச்சத்திலும் கொலை செய்ததாக கூறப்பட்டது. காதலனுடன் தனிமையில் இருந்த காதலி ரதி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.