பள்ளி மாணவி மரணம்!! ஆசிரியர் மீது நடவடிக்கை!! பின்னணி என்ன??

The girl died of jelly candy!

கடலூர்:
ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கீழ் அழிஞ்சிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவியாக பயின்று வந்த பிரியதர்ஷினி (வயது 7) என்ற சிறுமி, பள்ளியில் மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக மருத்துவசிகிச்சை பெறாததாலும், தவறான நிர்வாக நடவடிக்கையாலும் உயிரிழந்தார் என்ற புகார் எழுந்துள்ளது. கூலி தொழிலாளியின் மகளான பிரியதர்ஷினி, பள்ளிக்குச் சென்ற சில நிமிடங்களில் உடல்நலக்குறைவால் அழுது கதறியதாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் அவளிடம் கேள்வி எழுப்பிய பிறகும், உடனடி மருத்துவ உதவி பெறாமல் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக உறவினர்கள் கூறினர். பெற்றோர் இல்லாத நேரத்தில் உறவினர் ஒருவரால் அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கும் பின்னர் கடலூர் அரசு மருத்துவமனையும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உடல்நிலை மேலும் மோசமாகி, புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மாணவி உடல் நலக்குறைவால் துடிக்கும்போது உடனடியாக மருத்துவ உதவி அளிக்காதது ஏன்? பள்ளி நிர்வாகத்தின் தாமதம் மாணவியின் உயிருக்கு போனதற்கு காரணமா? என உறவினர்கள் வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். தொடக்க நடவடிக்கையாக பள்ளியில் பணியாற்றிய ரேவதி என்ற ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டு, மற்றொரு ஆசிரியைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்தது.
பிரியதர்ஷினியின் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி அமைப்புகளில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு முறை கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram