TVK: தவெகவின் இரண்டாம் கட்ட கூட்டம் சொகுசு விடுதியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவெளியில் அமைக்காதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் தன் கட்சியின் நிர்வாகிகளை இணைத்து, கட்சியின் உள்கட்டமைப்பு அமைப்பை (பேஸ்மெண்டை) உறுதிப்படுத்த திட்டமிட்டு இருந்தார். அந்தப் பணியில் கட்சியின் தலைவர்களுடன் இணைந்து சிறக்க செயல்பட்டும் வருகிறார். கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்திருந்தது.
முதல் கட்ட பொதுவெளி கூட்டத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் இரண்டாம் கட்ட பொதுவெளி கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்தபோது, தற்சமயம் கட்சி உள்கட்டமைப்பு குறித்து தொடர்ந்து பணிபுரிந்து வருவதால், இதுவரை இணைந்த நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய தொண்டர்கள் ஆகியோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு தனியார் சொகுசு விடுதியில் கட்சி சம்பந்தப்பட்ட ரகசிய ஆலோசனைகளை நடத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சி நிர்வாகிகளை ஸ்ட்ராங்காக மாற்றும் முன்னோக்கில் இந்த கூட்டம் நடைபெற இருப்பதால் அனுமதி சீட்டு இல்லாதவர்கள் விடுதிக்கு உள்ளே வர இயலாதபடி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உள்ளே வரும் கட்சி நிர்வாகிகளும் அனுமதி சீட்டுடன் வரவேண்டும் மேலும் அவர்களது மொபைல் சுவிட்ச் ஆப் செய்து தான் உள்ளே அனுமதிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை துரிதமாக செயல்படுத்தும் நோக்கிலும், தொண்டர்கள் செயல்படும் விதம் குறித்தும் குறிப்பாக கலந்தாலோசிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்தக் கூட்டத்தில் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மற்றும் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் வியூக தொகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் தலைமை வைக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளன.





