சம்மனை கிழித்ததால் தாக்கப்பட்ட ஊழியர்கள்!! புதிய வழிமுறை வகுத்த சீமான்!!

எந்த ஒரு அறிவிப்பும் இன்றி போலீசார் சம்மனை சீமானின் வீட்டில் சமீபத்தில் ஒட்டிச் சென்றுள்ளனர். ஏற்கனவே சீமான் கிருஷ்ணகிரியில் உள்ளார் என்ற செய்தி அறிந்தே இவ்வாறு செய்து உள்ளனர். சீமானின் மனைவி நைட் டிரஸ் இருந்ததால் சம்மனை படிக்க எடுத்து வரும்படி சீமானின் மனைவி கயல்விழி கூற, அவரது பணியாளர் அதைக் கிழித்து எடுத்துச் சென்றுள்ளார். ஒட்டி இருந்ததால் எடுக்கும்போதே கிழிந்து கொண்டு வந்து விட்டது. கிழிந்த சம்மனை படிக்க நான் முற்படும்போதே, வெளியே ஆய்வாளர் பிரவீனின் சத்தம் கேட்டது. நான் சென்று அவர்களை பார்க்கும் முன்னரே அங்கு பரபரப்பாக திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் முடித்து விட்டனர்.

ஆய்வாளரின் சட்டை கசங்கியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டிருந்தேன். நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும். மிக நேர்மையான தலைவர் சீமான். அவரை நடிகை வழக்கில் முடக்க திட்டமிட்டு சதி நடக்கிறது. எங்களை தாக்குவதை விட எங்கள் குடும்பத்தை தாக்கினால் நாங்கள் மனதளவில் பாரிக்கப்படுவோம் என்று திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளனர். எனது தம்பியை கைது செய்தே ஆவேன் என்று முடிவோடு இருக்கிறார்கள். இல்லையேல் படையை இறக்குவேன் என்று கூறினார்கள்.

நாங்கள் போலீசாரின் மீதும் வக்கீல்களின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் ஆய்வாளர் பிரவீனின் மீது மனித உரிமை வழக்கு போடுவோம். எங்கள் வீட்டில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி லைசென்ஸ் உடன் இருப்பவரையும் கைது செய்துள்ளனர். அன்றே மீட்க நாங்கள் முற்படும்போதே அவர்கள் மீது ரிமான்ட் செய்துள்ளனர்.

நாங்கள் அவர்களை நிச்சயமாக வெளியில் எடுப்போம் என்று பதிவிட்டு இருந்தார். சம்மனை கையில் ஒப்படைத்து கையெழுத்து வாங்காமல் போலீசார் இவ்வாறு செய்தது குற்றம் என்றே பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் வீட்டின் வெளியே சம்மன் ஓட்டுவதற்காக ஒரு போர்டே தயார் செய்து இனிமேல் எத்தனை சம்மன் வேண்டும் என்றாலும், இதில் ஒட்டிக் கொள்ளுங்கள் என்று அவர்களின் வீட்டின் சார்பில் வெளியே வைக்கப்பட்டுள்ளது

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram