தம்பி அண்ணாமலைக்கு நான் துணை நிற்பேன்!! ராஜ் தாக்கரேவுக்கு சீமான் கடும் எச்சரிக்கை!!

Seeman vs Raj Thackeray, Annamalai Mumbai Row, Tamil Pride.

அண்ணாமலை தனி ஆள் கிடையாது ராஜ் தாக்கரேவின் மிரட்டலுக்குச் சீமான் பதிலடி அண்ணாமலைக்கு ஆதரவாகத் ‘தம்பி’ பாசம்

சென்னை: மும்பை குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (MNS) தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் மராட்டிய தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, “அண்ணாமலை மும்பையில் கால் வைத்தால் வெட்டுவோம்” என்கிற ரீதியில் மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்ணாமலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

சீமானின் ஆவேச அறிக்கை:

ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அவமானம்: “ராஜ் தாக்கரேவின் வன்முறைப் பேச்சு என்பது தம்பி அண்ணாமலை என்ற ஒரு தனிமனிதரை மட்டும் அவமதிப்பதல்ல. அது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும், தமிழ் இனத்தையும் இழிவுபடுத்துவதாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”

வன்முறை கூடாது: மக்களை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள், இதுபோல வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுவது தகுந்ததல்ல என்று சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கடந்த ஆதரவு: “கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு என எங்களுக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அண்ணாமலை ஒரு தமிழ் மகன். அந்த அடிப்படையில் அவர் மீது கை வைப்போம் என்று சொன்னால், நாங்கள் அவருக்குத் துணையாக நிற்போம்” எனச் சீமான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் திருப்பம்: வழக்கமாக பாஜகவின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்க்கும் சீமான், இப்போ ஒரு தமிழன் என்கிற அடிப்படையில் அண்ணாமலைக்காக வாதாடுவது அரசியல் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தையும், அதேசமயம் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram