சீமான் வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி சென்றபோது, அவரது வீட்டின் வெளியே எந்த ஒரு அறிவிப்பும் இன்றி போலீசாரால் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. சீமானின் மனைவி அதை எடுத்து வரும்படி கூறி, பணியாளர் சுபாகர் எடுக்க முற்படும் போது அது கிழிந்துள்ளது. அதனால் அங்கு அடுத்த நிமிடம் வந்த ஆய்வாளர்களுக்கும், சீமான் வீட்டு பணியாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டு, அதில் சம்மனை கிழித்த குற்றத்திற்காக சுபாகரையும், முன்னாள் ராணுவ வீரரான பாதுகாவலர் அமல் ராஜையும் கைது செய்து அவர்களின் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டிருந்தது.
இதனால் கொந்தளித்த நாதக தலைவர் சீமான் வழக்குக்கு ஆஜராக முடியாது என்று பல பிரச்சினை எழுப்பி இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஜாமீன் வழங்க கோரி வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்திருந்தது. காவல்துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர், சம்மனை கிழித்தது மட்டுமல்லாமல் ஆய்வாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் துப்பாக்கியினால் ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் என்றபடி அவரது விவாதத்தை வழங்கினார். அவர்கள் மீது நடப்பில் எந்த ஒரு நிலுவை வளர்க்கும் இல்லை. துப்பாக்கி பாதுகாப்பிற்காக தான். அதை வைத்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றவாளிகள் வாதாடினார்கள். நீதிபதி இவ்வழக்கை விசாரித்து, இதற்கு மேலும் இவர்கள் சிறையில் இருக்க தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை தினமும் காலையில் பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளார்.