புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மாநிலங்களில் அரங்கேறி வரும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக வெற்றி கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தவெக தலைவர் விஜய் எடுத்து வருகிறார்.
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆணவ படுகொலைகள் என்பது ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. ஆணவ படுகொலைகளை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் எதுவும் பலனளிக்கவில்லை. தற்போது நாளுக்கு நாள் ஆணவக் கொலைகள் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில் ஆணவ படுகொலைகளை தடுக்க அதற்கென தனி சட்டம் ஒன்றினை இயற்ற உத்தரவிட வேண்டும் என தமிழக வெற்றி கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆணவ படுகொலைகளை தடுக்க முடியாத சூழ்நிலையில் தற்போதைய சட்டங்கள் உள்ளது.
ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை மனு ஒன்றினை சுப்ரீம் கோர்ட்டிற்கு அளித்துள்ளார். ஆணவ படுகொலைகள் குறித்து மனு தாக்கல் ஆனது விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என பல தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.