லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டன் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பித்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அக்டோபர் 23ஆம் தேதி பூங்காவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு சம்பவங்களையும் தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து விசாரணையை தீவிர படுத்தினர்.
விசாரணையில் இரண்டு சம்பவங்களையும் நடத்தியது 24 வயதான நவ்ரூத் சிங் என்பது தெரியவந்தது. மேலும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனவும் கண்டுபிடித்துள்ளனர். இதை எடுத்து அக்டோபர் 27ஆம் தேதி நவரூப் சிங்கை போலீஸ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நவ்ரூத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கானது ஐசில்வர்த் கிரவுண்ட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நவ்ரூத் சிங் மீதான குற்றம் சிசிடிவி கேமராக்களின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டதால் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. குறிப்பாக 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.