திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்த உதயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு குறித்து விசாரணைக்கு அழைத்துள்ளார். விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பாலியல் அத்துமீறல் செயல் குறித்து கொல்லம் மாவட்ட நீதிபதி அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இளம் பெண் கொல்ல மாவட்ட நீதிபதியிடம் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கேரளா ஹை கோர்ட் உத்தரவின் பேரில் அவர் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு குழு முன் வழக்கை விசாரிக்க உதயகுமார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அமர்வு குழு விசாரணை நடத்திய அறிக்கையை பதிவாளருக்கு சமர்ப்பிக்கும் படி உத்தரவிடப்பட்டது. கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட குடும்ப நல நீதிபதி உதயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக மறு அறிவிப்பு வரும் வரை நீதித்துறை பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உதயகுமாருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் குடும்ப நல நீதிபதி உயர்நிலை உதயகுமாரை கேரள உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.