தற்போது தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து வருகிறது. சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுவது, வயது முதிர்ந்தோர் பாலியல் தொல்லை உட்படுத்தப்படுவது தனியாக வரும் பெண்கள் பாலியலுக்கு உட்படுத்தப்படுவது என இந்த பாலியல் என்பது அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தற்போது ரயிலில் பாலியல் என்பது சமீப காலமாக அதிகரித்து தான் வருகிறது. சமீபத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் ஓடும் ரயிலில் பாலியல் துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட அந்தப் பெண் கர்ப்பம் கலைந்து அந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற செய்திகளை கேட்டு மீண்டும் இந்த தவறு நடக்காது என எதிர்பார்த்த பொழுது. மீண்டும் இதுபோன்ற ரயிலில் ஒரு பாலியல் சம்பவம் நடந்தேறி உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வந்த பாசஞ்சர் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞரை சக பயணிகள் சரமாரியாக அடித்து உதைத்தனர் இதில் காயமடைந்த திண்டிவனம் கோனேரி குப்பத்தை சேர்ந்த பார்த்திபன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தப்பி ஓடிய அந்த வாலிபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.