சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு!! இந்தியா பிரகடனத்தை நிராகரித்தது ஏன்?

Shanghai Cooperation Organization
ஷாங்காய்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தை நிராகரித்தது இந்தியா. சீனாவின் ஷாங்காய் ஒத்துள அமைப்பு அமைப்பின் இரண்டு நாள் மாநாடு தொடங்கியது. சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் உள்ள குவிங்டாவ் நகரத்தில் ஜூன் 25ஆம் தேதி தொடங்கியது. இந்தியா சார்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். இந்திய, சீனா வீரர்களுக்கு இடையே 2020 இல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீனாவிற்கு சென்ற முதல் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்ற அவர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டு பிரகடனத்தை நிராகரித்துள்ளார். காரணம் குறித்து பேசிய ராஜ்நாத் சிங், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள இந்தியா மீது தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் ஏவப்படுகிறது. குழுவிலுள்ள மற்ற உறுப்பு நாடுகள் பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதலை எதிர்ப்பதற்காக “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் தாக்குதல் கொடுத்தோம். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கையாகக் கொண்டு இருக்கிறது. இது போன்ற நாடுகள் தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக இருக்கிறது. பயங்கரவாதத்தின் ஒழிப்பு இரட்டை நிலைப்பாட்டிற்கு இடம் கொடுக்க கூடாது” என தனது ஆதங்கத்தை தெரிவித்து கையெழுத்திட மறுத்து விட்டார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவின் கருத்துக்கள் ஆவணத்தில் இடம்பெற வேண்டும் என இந்தியா விரும்புவதாக கூறினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி குறிப்பிட்டதோடு பாகிஸ்தானில் நடைபெற்ற சில சம்பவங்கள் அதில் சேர்க்கப்பட்டது தான் பிரகடனத்திற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது காரணமாகும் என கூறியுள்ளார்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram