பொதுவாக ஷேர் மார்க்கெட்டிங் என்றாலே பலரும் தெறித்து ஓடுகிறார்கள். இதில் போடப்படும் பணம் ஆனது வாங்கும் ஷேரை பொறுத்து ஏற்றம் அல்லது இழப்பு ஏற்படலாம். இதனால் இது குறித்த தேடல் பலரிடம் காணப்படுவதில்லை. பலரும் இது குறித்த அடிப்படை விஷயங்கள் கூட தெரிய முன் வருவதில்லை. ஷேர் மார்க்கெட்டிங்கில் ஷார்ட் டெர்ம் இன்வெஸ்ட் செய்தால் நிச்சயமாக குறைந்த அளவு லாபம் அல்லது இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ஆனால் லாங்க் டேர்ம் இன்வெஸ்ட்மெண்ட் செய்தால் நிச்சயமாக எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
இந்தப் பதிவு இதன் மூலம் சமீபத்தில் ஜாக்பாட் அடித்த குடும்பத்தைச் சார்ந்தது. சண்டிகரை சேர்ந்த ரத்தன் என்பவர் தன் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது 1992 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட ரீலையன்ஸ் ஷேர் பத்திரத்தை கண்டுபிடித்துள்ளார். அப்பொழுது அந்த ஷேரை ரூபாய் 30 கொடுத்து அவரது வீட்டில் உள்ள யாரோ வாங்கி உள்ளார்கள். அந்தப் பத்திரத்தை வைத்து அதன் மதிப்பீடு தற்சமயம் ஆராயப்பட்ட பொழுது, அதன் மதிப்பு 12 லட்சம் என்கின்ற ஆச்சரியமான தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த ரத்தன் தனது எக்ஸ் தளத்தில் அந்த பத்திரத்தின் போட்டோவை பதிவிட்டு அப்பொழுது 30 ரூபாய் இப்போ 12 லட்சம் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார். ஷேர் மார்க்கெட்டிங்கில் அடிப்படை தெளிவுடன் லாங்க் டேர்ம் இன்வஸ்ட் செய்தால் நிச்சயமாக அதன் பலன் எதிர்பார்க்க முடியாததாக தான் அமையும் என்பதற்கு இது ஒரு சான்று என்று ஷேர் மார்க்கெட் வல்லுநர்கள் எடுத்துரைத்து வருகின்றனர்.