Bangaladhesh: வங்கதேசத்திற்கு சென்ற வருடம் வரை பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசினா. சில உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவானது . மேலும் அண்டை நாடான இந்தியாவிற்குல் தஞ்சம் புகுந்தார். இதனிடையில் அவர் மீண்டும் வங்கதேசத்தின் பிரதமராக திரும்புவார் என்று அவரது நண்பர் அமெரிக்க அவாமி லீக்கின் துணைத் தலைவர் ரப்பி ஆலம் கூறினார்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக வெடித்த போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது மேலும் பிரதமரின் அலுவலகம் முதல் அனைத்து அரசாங்க அலுவலகங்களையும் அடித்து நொறுக்கினர். பின்பு போராட்டக்காரர்களுடன் கிளர்ச்சியாளர்கள் சேர்ந்ததால் வன்முறை பூதாகரமாக வெடித்தது.பிரதமர் ஷேக் ஹசீனா தனது சகோதரியுடன் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் சூழல் உருவானது.
இந்தியாவில் இருந்த வங்கதேசத்தில் பிரதமர் லண்டனுக்கு செல்ல உள்ளதாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு பிரிட்டன் விசா கிடைக்காத காரணத்தினால் அவர் இந்தியாவில் தங்கி வந்துள்ளார். இதனிடையில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைப் பற்றி கூறிய இடைக்கால அரசின் ஆலோசகரான முகம்மது யூனுஸ் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பச் செல்ல வேண்டும். மேலும் இடைக்கால அரசின் மோசமான நிர்வாகத்தின் காரணமாக வங்கதேசம் இப்பொழுது தீவிரவாதத்திற்கு அடித்தளமாக உள்ளது. மேலும் வங்கதேசம் பொருளாதார சிக்கலில் மாட்டி உள்ளது.
இந்தியாவைப் பற்றி கூறிய ஷேக் அசினா கடந்த காலங்களில் எங்களுடைய பல தலைவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர் .அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த இந்தியாவுக்கு நன்றி கூறுகிறோம். மேலும் எங்களுடைய ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு அளித்த நரேந்திர மோடிக்கும், இந்தியா மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் உள்நாட்டில் நடந்த அரசியல் சூழ்ச்சியினாலே இந்த போராட்டம் வெடித்தது மற்றும் சில அரசியல் காரணங்களுக்காக மாணவர்களை தவறான வழியில் வழி நடத்தியுள்ளனர். மேலும் இடைக்கால தலைவராக இருக்கும் டாக்டர் யூனுஸ் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவரே இல்லை என்றும் அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே செல்ல வேண்டும் என்று கூறினார். மேலும் வங்கதேசத்துக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரும் அரசு ஷேக் ஹசீனாவின் தலைமையில் மீண்டும் வங்கதேசத்தை ஆளும் என்று கூறியுள்ளார்.