விஜயவாடா: இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற சத்ரபதி சிவாஜியின் வீரம் அங்கீகரிக்கப்படவில்லை என பவன் கல்யாண் சுட்டிக்காட்ட உள்ளார். பாபர் மற்றும் அக்பர் ஆகியோருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை போல் சத்ரபதி சிவாஜிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது இல்லை என ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் மறைமுகமாக எடுத்துக் கூறியுள்ளார்.
விஜயவாடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கூறிய அவர், அக்பர் மற்றும் பாபர் ஆகியோரை உயர்வாக பேசுகிறோம். பாபர் அதிரடி ஆக்கிரமிப்பாளருடன் ஒப்புமைப்படுத்தி பேசுகிறோம். ஆனால், விஜயநகர பேரரசு பற்றி சொல்லப்படாதது ஏன்? தமிழ்நாட்டில் கோவில்களை காப்பாற்றிய வரலாறு சத்ரபதி சிவாஜி பற்றிய குறிப்புகள் பாடப் புத்தகங்களில் குறிப்பிடாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அரசர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப் படவில்லை என்று கூறி இந்தியர்கள் அனைவருக்கும் வரலாற்றில் நடந்த உண்மைகள் பற்றி அறிய வேண்டிய அவசியம் உள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார் பவன் கல்யாண்.
இந்தியர்களின் வரலாறுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இருக்கின்ற வரலாறுகளையும் சரிவர பராமரிப்பது இல்லை. இந்நிலையில் துணை முதல் மந்திரி பவன் கல்யாண், சத்ரபதி சிவாஜியின் வீரம் பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது தற்போது பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது.