சமீபத்தில் நடிகர் பிரபு அவர்களின் அண்ணன் ராம்குமார் பெற்ற கடனைக்காக சிவாஜி அவர்களின் அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படுவதாக நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அன்னை இல்லத்தில் அண்ணன் ராம்குமாருக்கு உரிமை இல்லை என்றும் அது என்னுடைய சொத்து என்றும் நடிகர் பிரபு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகளும் அண்ணனுக்கான பணத்தை நீங்கள் கொடுத்துவிட்டு உங்கள் அண்ணனிடம் பொறுமையாக பெற்றுக்கொள்ளலாமே என ஆலோசனை கூற, ராம்குமார் எத்தனை பேரிடம் கடன் வாங்கி வைத்திருக்கிறார் என எனக்கு தெரியாது ஆகவே என்னால் அவருடைய கடனை அடைக்க முடியாது என்பது போல நீதிபதிகளிடம் இவை ஒரு புறம் இருக்க சிவாஜி கணேசன் இறந்த பின்பு அவருடைய சொத்தை பறிப்பதில் மிகப்பெரிய சண்டையை எழுந்திருக்கிறது. அதில் சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களான பிரபு மற்றும் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த வழக்கில் சிவாஜியவர்கள் எழுதி வைத்ததாக போலி உயிலை தயார் செய்து கொண்டு சொத்தை சகோதரர்களை அபகரிக்க பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதன் பின் நால்வரும் அமர்ந்த பேசி தங்களுக்கு இந்த சொத்து என பிரித்துக் கொண்டதாகவும் அப்படி பிரிக்கப்பட்டதில் தான் அன்னை இல்லம் பிரபு அவர்களுக்கு என பிரிக்கப்பட்ட இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த சொத்தை என் அண்ணனுக்காக என்னால் தர முடியாது என பிரபு அவர்கள் தளாலடியாக மறுத்துவிட்டார்.