குற்றச்சம்பவங்களை தடுக்க.. துப்பாக்கிச் சூடு!! அதிர்ச்சியில் ரவுடிகள்!!

Shooting to prevent crime

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக தமிழக காவல்துறைக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு.

அந்த அறிவிப்பின்படி இனி தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களில் ஈடுபடக்கூடிய ரவுடிகளை சுட்டு பிடிப்பதற்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதற்காக தமிழக அரசு இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாகவும் இனி தமிழகத்தில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள், ரவுடிகள் மோதல், கொலை, சாதிய வன்முறைகள், நிலம் தொடர்பான வன்முறைகள், மணல் மாஃபியாக்கள், கனிம வள மாஃபியாக்களின் சட்டவிரோத செயல்கள் போன்றவை அதிகரித்து வருவதாகவும் இது போன்ற குற்றவாளிகளை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர்கள் மற்றும் போராடக் கூடியவர்களை கொலை செய்வது போன்ற குற்ற நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற சமூக குற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலர் மீது லாரி ஏற்றி கொலை, நிலத்தகராறு காரணமாக நெல்லையில் காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டது, சென்னை அயனாவரம் பகுதியில் திமுக பிரமுகர் கடத்தி கொலை செய்யப்பட்டது மற்றும் சமீபத்தில் ஈரோடு நடந்தாலையில் பிரபல சேலத்து ரவுடி ஜான் என்பவர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டது போன்றவற்றை சுட்டிக்காட்டி இனி இது போன்ற ரவுடிகளை நேரடியாக சுட்டு பிடிக்க உத்தரவிடப்பட்ட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram