ஸ்ருதிஹாசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை என்றாலும், தெலுங்கு சினிமா துறையில் தான் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு மொழி திரைப்படங்களில் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபாஸ்- க்கு ஜோடியாக நடித்த சலார் படம் கூட திரையில் நன்றாக ஓடி 100 கோடிக்கும் மேலான வசூல் சாதனை செய்தது. புதிய தெலுங்கு திரைப்படமான “டகாய்ட்”என்ற படத்தில், நடிகர் அதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் முதலில் தேர்வாகி இருந்தார். ஸ்ருதிஹாசன் அந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதுடன், அவரை வைத்து ஒரு டீசர் காட்சியை எடுத்து வெளியிட்டது. இதனால் படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது.
ஆனால் திடீரென, இந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதாகவும், அவருக்குப் பதிலாக மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஸ்ருதிஹாசனை வைத்து எடுத்த அதே டீசர் காட்சியை, தற்போது மிருனாள் தாக்கூரை வைத்து மீண்டும் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். இதை அடுத்து, ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டாரா? என ரசிகர்களிடையே பல கேள்விகள் எழ ஆரம்பித்தன. ஸ்ருதிஹாசன் தனது விருப்பத்தின்படி தானாகவே இந்த படத்திலிருந்து விலகினார் என்று படக்குழு நேரடியாக விளக்கம் அளித்தது.