சமீபத்தில் 3 bhk படம் வெளியீட்டு விழா கோலாலமாக நடைபெற்று இருந்தது. அதில் பட குழுவினர் மற்றும் ராம் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது படம் குறித்து இயக்குனர் ராம் பேசுகையில், சித்தாள் தன்னுடன் கற்றது தமிழ் திரைப்படத்திற்கு பின் தானாக தேடி வந்து பேசிய ஒரே ஹீரோ. சித்தார்த் பார்த்தால் எப்படி தெரிவார் என்று தெரியுமா! ஒரு புத்திசாலி. அகங்காரமானவன் என்றபடி அவரது செயல் தோன்றும். ஆனால் உண்மையிலேயே சித்தார்த் ஒரு அடி முட்டாள் என்று வெளிப்படையாக திட்டி உள்ளார்.
சித்தார்த் மனதில் பட்டதை எதிரில் உள்ளவர் மனதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் எதிர்த்து கேட்பவர். நினைத்ததை நினைத்த இடத்தில் பேசி செல்பவர். அவருக்கு யோசித்து மனதில் வஞ்சம் வைத்து எல்லாம் பேச தெரியாது. நான் சித்தார்த் எல்லாம் ஒன்றாக தான் படித்தோம். அவர் அந்தப் பள்ளியை விட்டு வெளியே வரவே இல்லை. அவ்வளவு ஒரு குழந்தை தனம் மிக்கவர். அவர் இளமையாக தோன்றுவதற்கு காரணமே அவரவருடைய மனதுதான் என்று அவரை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் இயக்குனர் அருண் சித்தார்த் செல்வம் ஆகியோருடன் இணைந்து மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ராம். மேலும் படம் குறித்து பேசுகையில் இந்த படம் நிச்சயமாக அனைவரும் வாழ்க்கையில் ஒத்துப் போகும் ஒரு விஷயமாக அமையும். வீடு என்பது ஒரு உணர்வு அதையும் தாண்டி அது தன் குழந்தைகளுக்கான வாழ்வை வழி நடத்திச் செல்வது. அப்படி ஒரு உணர்ச்சிமிக்க வீடை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் அமைந்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்ப பெறும் என்றவாறு அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.