சிம்பு மற்றும் வெற்றிமாறன் இரண்டு பிரபலங்களும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இதுபற்றிய செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற படங்களில் ஹீரோவாக மின்னி வரும் மணிகண்டன், இப்போது இந்த படத்தில் ஒரு சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மணிகண்டனின் நடிப்பு எப்போதும் தனிச்சுவை கொண்டதுதான். இந்த படம் தனுஷின் ‘வடசென்னை’ தொடர்ச்சியா? என்பதைப்பற்றி பல வதந்திகள் பரவி வந்தன. இதை இயக்குநர் வெற்றிமாறன் தெளிவுபடுத்தி விட்டார். தனுஷுடன் இருக்கும் நெருங்கிய தொடர்பால், இந்த படத்திற்கும் வடசென்னை படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மேலும், இந்த படம் ‘வடசென்னை 2’ அல்ல என்றும், அது தனுஷுடன் தான் உருவாகும் என்றும் கூறியுள்ளார்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஒரு கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். கதைக்களம் ‘வடசென்னை’ படத்துடன் தொடர்புடையது போல இருந்தாலும், இது ஒரு தனிப்பட்ட கதை என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். இதுவும் அதே காலகட்டத்தில் நடைபெறும், ஆனால் மாறுபட்ட பாதையில் செல்லும் கதை என அவர் விளக்குகிறார். வடசென்னை படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா மற்றும் அமீர் இவர்கள் அனைவரும் சிம்பு நடிக்கும் இப்படத்திலும் இணைகின்றனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புதிய கூட்டணிக்கான அறிவிப்பு வீடியோவை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் சிறப்பு தோற்றம் அளிக்கிறார். அதன் பிறகு, படத்தின் டைட்டில் வீடியோவும் வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.