இப்போது வெயில் காலம் என்பதால் இளவயது பெண்கள் சரும பிரச்சனைகளை தினசரி சந்தித்து வருகின்றனர். இளவயது பெண்கள் குறிப்பாக கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது அழகை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கு அழகு நிலையங்கள் சென்றால் தான் பராமரிக்க முடியும் என்று என்ன வேண்டாம். நாமே நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, அவரவர் சருமத்திற்கு ஏற்றாற்போல் உங்கள் முகத்திற்கு எது பொருத்தமானது என்று தேர்வு செய்து அதை உபயோகித்து பயனடையலாம்.
அதுவே நமது உடலுக்கு முழு ஆரோக்கியத்தையும் கொடுக்கும் .மேலும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து தயார் செய்வதால் நமது சருமம் பொலிவடையும் எந்த ஒரு பக்க விளைவுகள் இல்லாமல் ,எந்த ஒரு வேதிப்பொருட்கள் இல்லாமல் இயற்கை முறையில் சருமத்திற்கு பளபளப்பை தருகிறது. இந்த நேரத்தில் வெயிலில் அதிகம் அலையும் பெண்கள் முறையான பொருட்கள் பயன்படுத்த வில்லை என்றால் மென்மையான தோல் சுருங்கி விடும். இது நீக்குவதற்கு கடலை மாவு,கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கரைத்து முகம் ,கை கால்களில் தடவி ஊற விட்டு குளித்து வரலாம்.
அதைப்போல் வறண்ட சருமங்களுக்கு வெண்ணெய் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும் .இதன் மூலம் நம் சருமத்தை மீட்டெடுக்கலாம். வெயில் காலத்தில் இயற்கையான எண்ணெய் பசையை விட கொஞ்சம் அதிகம் சுரக்கும். அதிகமான கவலை ,அலைச்சல் போன்றவைகள் சருமத்தை மாசுபடுத்தி செல்லும். இதற்கு வீட்டில் இருக்கக்கூடிய கெட்டித்தயிர் எடுத்து இரவு நேரத்தில் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். எண்ணெய் பசை முழுவதும் நீக்கி, முகத்தில் இருக்கும் மாசையும் அகற்றுகிறது.