சிறகடிக்க ஆசை டுடே எபிசோடில் பரபரப்பான பல அதிரடி விஷயங்கள் நடந்துள்ளன. ரோகிணி மாமா முத்துவை பார்த்தவுடன் கிளம்புவதை கவனித்த முத்து நில்லுங்க போன் எடுத்துட்டு போகாம போறீங்கன்னு வழி மறைத்து போனைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார். கடைக்குள்ள வண்டியா ஓட்ட போறீங்க என்று கேட்டதற்கு ஆமாம் தலையை ஆட்டி விட்டு கறி கடைக்காரர் தலையை ஹெல்மெட் அணிந்தபடி தப்பிச் செல்கிறார்.
உடனே ரோகிணியை பார்த்து முத்து, போன் எடுத்து கொடுத்ததற்கு டேங்க்ஸ் கூட சொல்லாம ஹெல்மெட்டோட போறாரு அப்படின்னு கேட்க, ரோகிணி அதை அவரிடம் கேளுங்க என்று கூறுகிறார். உடனே மாமனாரிடம் நீங்க எதுக்கு மாமா இங்க வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு முத்து தலையிட்டு, இது எங்க அப்பா கடை எப்ப வேணும்னாலும் வருவாரு. கணக்கு வழக்க எடுத்து வைங்க எங்க அப்பா பாக்கணும் என்று கூறுகிறார்.
அண்ணாமலை குறுக்கிட்டு, நான் என்ன இன்கம் டேக்ஸ் ஆபிஸரா கணக்கு காட்ட என்று முத்துவிடம் சொல்லிட்டு, இல்லம்மா என்னோட பிரண்டு பையனுக்கு கல்யாணம். அதான் நம்ம கடையில ஏதாவது ஜாமான் வாங்கலாம்னு வந்தேன் என்று கூறுகிறார். சொல்லியிருந்தால் நானே கொண்டு வந்திருப்பேன்ல மாமா என்று கூற, முத்து, ரோகிணியிடம் இதற்கு பணம் எல்லாம் தர முடியாது எங்க அப்பாவுக்கு நீங்க பணம் தரணும்ல. அதுல இதை கழிச்சுக்கோங்க என்று கூறுகிறார். அதற்கு இல்லமா நான் காசு கொண்டு வந்து இருக்கேன் என்று அண்ணாமலை மறுத்துப் பேசி ரோகிணியோடு செல்கிறார்.
மற்றொருபுறம் மனோஜ் தெரிந்த குரல் கேட்கிறது என்று திரும்பிப் பார்க்க தன்னை ஏமாற்றிய கதிர் என்று கணித்து டேய் நில்லுடா என்று கத்திக்கொண்டே துரத்துகிறார். இவனின் குரல் கேட்டவுடன் கதிர் காரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். வழியில் உள்ள அனைவரையும் தள்ளிவிட்டு மனோஜ் முந்திக்கொண்டு, கதிரை நோக்கி செல்கிறார். கீழே விழுந்த அனைவரும் இணைந்து ஒன்றாக மனோஜ் துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் போது ஆக்சிடென்ட் ஆகி விடுகின்றது. ஒருபுறம் விஜயா பாத்ரூமில் வழுக்கி விழுகிறார். அவரைக் கை தூக்க வந்தால் முத்துவிடம் கையை கொடுக்காமல், அடுத்து வந்த மீனாவிடமும் கை கொடுக்காமல் கத்திக் கொண்டே உள்ளார். அங்கு எதார்த்தமாக வந்த ரவியின் கையை பிடித்து எழுகிறார்.
இதைக் கண்ட முத்து சோகமாக அடுப்படிக்குள் மீனாவிடம் நானும் அவர்கள் பெற்ற பயன் தானே என்று ஆபத்து என்கிற போது கூட என் கையை பிடிக்க மாட்டார்களா என்று புலம்புகிறார். சூழ்நிலை இப்படி இருக்க, ரோகிணியிடம் இருந்து விஜயா விற்கு போன் வருகிறது. அழுது கொண்டே மனோஜ்க்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு என்று கூறுகிறார் ரோகிணி. பதறிப்போன குடும்பம் ஹாஸ்பிடலுக்கு ஓடுகின்றது. டாக்டரிடம் ரோகிணி சார் அவருக்கு கண்ணுல எந்த பிரச்சனையும் இல்லைல. ஏதாவது பிரச்சனைனா நான் வேணும்னா என் கண்ண அவருக்கு தரேன் என்று கூறுகிறார்.
ரோகிணி அங்கு அழுது கொண்டே நிற்கிறாள். வந்தவர்களிடம் விஷயத்தை கூறுகிறார். அங்கு ஓடி வந்த ரவியின் மனைவியும், மீனாவும் ரோகிணிக்கு ஆறுதல் கூறுகிறார்கள். முத்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையில் முத்துவும் மீனாவும் எப்படி இவனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு! இவன் கார்ல தானே போவான் என்று பேசிக் கொண்டிருக்கும் போது, இவரால் அடிபட்டு ஹாஸ்பிடல் வந்தவர்கள் வண்டி உடைந்ததற்கு முத்துவிடம் பணம் வாங்கி செல்கிறார்கள். அவர்களிடம் முத்து விசாரித்த போது, எங்களுக்கு எதுவும் தெரியாது சார். டேய் நில்லுடா என்று கத்திக் கொண்டே ஓடினார் என்று கூறியுள்ளனர். யார நில்லுடான்னு இவன் துரத்துனான்னு இருவரும் டிஸ்கஸ் செய்து வருகின்றனர். இதோடு இந்த எபிசோடு முடிகிறது.