தளபதி மனசே தனி ஜனநாயகன் vs பராசக்தி மோதல் குறித்து மேடையில் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
சென்னை:
2026 பொங்கல் ரிலீஸில் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின்றன. இதனால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு நிலவி வந்த நிலையில், ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் ஒரு சுவாரஸ்யமான ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.
விஜய் அனுப்பிய மெசேஜ்:
விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “ஒரே நாளில் ரெண்டு படமும் வர்றது பத்தி விஜய் சாரோட மேனேஜர் ஜெகதீஷ் அண்ணா கிட்ட பேசினேன். அவர் விஜய் சார் கிட்ட இதைப்பத்தி சொல்லியிருக்காரு. அதுக்கு விஜய் சார், ‘அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ரெண்டு படமும் பொங்கலுக்கு சூப்பரா வரட்டும்.. என்னோட வாழ்த்துகளை தம்பி சிவகார்த்திகேயனுக்கு சொல்லுங்க’ அப்படின்னு சொன்னதா ஜெகதீஷ் அண்ணா என்கிட்ட சொன்னாரு,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆரோக்கியமான போட்டி:
விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், சினிமாவில் தனக்கு அடுத்ததாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனை அவர் வாழ்த்தியிருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. விஜய்யின் இந்த வாழ்த்து ‘பராசக்தி’ படக்குழுவினருக்குப் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்பு:
ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் மோதுவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஏற்கனவே இது வணிக ரீதியான இழுபறி மட்டுமே என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
இப்போது சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சு, திரையுலகில் ஆரோக்கியமான போட்டி நிலவுவதை உறுதிப்படுத்தியுள்ளது




