கேரளாவில் ‘பராசக்தி’ மேளா லால் எட்டன் டயலாக் பேசி மாஸ் காட்டிய எஸ்கே – அதிர்ந்த கொச்சி மால்
கொச்சி: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி, படக்குழுவினர் கேரளாவுக்குத் தனி விமானத்தில் சென்று அங்குள்ள ரசிகர்களைச் சந்தித்து வருகின்றனர்.
லால் எட்டன் டயலாக்: கொச்சியில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘தொடரும்’ (Thudarum) படத்தில் வரும் அந்த ஃபேமஸ் டயலாக்கை பேசி அசத்தினார்.
நிண்டேயோக்கே கூட்டத்தோடு போய் பறஞ்சேக்கு ஒத்தயான் வீண்டும் காடு ஏறிட்டுண்டேன்னு உங்க கூட்டத்துக்கிட்ட போய் சொல்லுங்க.. அந்த ஒத்தயான் மறுபடியும் காட்டுக்குள்ள வந்துட்டான்
என்று அவர் மலையாளத்தில் பேசியதும், அரங்கமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.
பராசக்திக்கு கேரளா வரவேற்பு: பின்னர் பேசிய எஸ்கே, “பராசக்தி ஒரு பீரியட் டிராமா (1965 பின்னணி). தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும், இதில் இருக்கும் உணர்ச்சிகள் உலகளாவியது. கேரள ரசிகர்கள் நல்ல கதைகளை எப்போதுமே ஆதரிப்பார்கள். அந்த வகையில் ‘பராசக்தி’க்கு இங்கே பெரிய வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
விஜய்க்கு வாழ்த்து: ஏற்கனவே தமிழகத்தில் நடந்த ஆடியோ லாஞ்சில், “ஜனவரி 9-ம் தேதி விஜய் சாரோட ‘ஜனநாயகன்’ படத்தை கொண்டாடுங்க, 10-ம் தேதி நம்ம படத்துக்கு வாங்க” என அவர் பேசியது கேரள விஜய் ரசிகர்களிடமும் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. ‘பராசக்தி’ கேரளாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


