சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ வருகை சென்சார் போர்டு கொடுத்த ‘க்ளீன்’ சிக்னல் – நாளை முதல் திரையரங்குகளில் அதிரடி
சென்னை: ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. இந்தப் படம் நாளை (ஜனவரி 10) உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது.
சென்சார் அப்டேட்: திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகள் சரிவிகிதத்தில் இருப்பதால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில் படம் அமைந்துள்ளதாகத் தணிக்கைக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிக்கெட் புக்கிங் நிலவரம்: நாளை ரிலீஸ் என்பதால், இன்று காலை முதலே ஆன்லைன் புக்கிங் தளங்களில் டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன. ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் குழப்பத்தில் இருப்பதால், பல தியேட்டர்களில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் என்ன ஸ்பெஷல்?
-
சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ஒரு புதிய பரிமாணத்தில் நடித்துள்ளாராம்.
-
படத்தோட பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில், நாளை பின்னணி இசை மற்றும் திரைக்கதை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
-
பொங்கல் ரேசில் முதல் ஆளாக சிவகார்த்திகேயன் களமிறங்குவது அவரது ரசிகர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது





