தவெக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் நேற்று ஜூன் 22 கோலகாலமாக கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே கட்சி நிர்வாகிகள் இணைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராஜாஜி பகுதியில் தவெக நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேற்று கொண்டாடத் திட்டமிட்டு இருந்தனர். அங்கு நகரச் செயலாளர் சசிகுமார் மற்றும் அக்கட்சியின் கிளை தலைவர் நாகராஜ் ஆகியோர் தலைமை வகித்து ராஜாஜி பகுதியில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கீழ் பகுதியை சார்ந்த கிளை தலைவர் நாகராஜ். அவரது ஏற்பாட்டில் மாலையில் விஜயின் பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. அங்கு வந்த புதிய பாஞ்சாலியூர் பகுதியைச் சேர்ந்த தபு என்கிறவர் உரிய அனுமதி பெறாமல் திடீரென குடியிருக்கும் இடத்தில் தவெக கட்சி கொடியை ஊன்றி, விஜயின் பிறந்தநாளை நடத்த முற்பட்டுள்ளார். இதனால், கிளைத் தலைவர் நாகராஜ் கேள்வி எழுப்பிய நிலையில், அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கண நிமிடத்தில் தபு, பட்டாகத்தி காட்டி மிரட்டி உள்ளார். இதனால் மோதல் இரு தரப்பிற்கும் இடையே அதிகரித்து உள்ளது. அப்போது பட்டா கத்தி வெட்டின் காரணமாக ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இது அப்பகுதியை பரபரப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் தவெக தலைமை வரை இந்த செய்தி சென்று கண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கத்தியை தாண்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது கிளை தலைவர் மற்றும் நகர செயலாளர் ஆகியோருக்கு இடையேயான மோதல் என்றும் செய்திகள் கசிகின்றன.