கொழும்பு: இலங்கையின் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தற்போது யாழ்ப்பாணத்தில் செம்மணி என்னும் பகுதியில் அகழ் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. செம்மணி என்னும் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 40 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு வெகுஜன புதைக்குழி செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது செம்மணியில் இரண்டாம் கட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ஜூலை மூன்றாம் தேதி குழந்தைகள் உட்பட நான்கு பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு ராணுவ வீரர் ஒருவர் வெகுஜன புதைக்கூடிய பற்றி நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது. செம்மணியில் 400 தமிழர்கள் புதைக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
அதை எடுத்து கொக்கு தொடுவாய் மற்றும் மன்னார் போன்ற இடங்களில் 1992 மற்றும் 2022 கிடையில் 32 வெகுஜன புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரில் காணாமல் போன உறவினர்கள் இருக்கும் என கண்காணித்து வருகின்றனர். எலும்பு குழம்பு யாருடையது என்பது தெரியாமல் இருக்கிறது. உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு மனித எச்சங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்பது கேள்வியாக உள்ளது.
போரின் சமயத்தில் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்கள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் எச்சரித்துள்ளார். இதைத்தொடர்ந்து வெகுஜன புதைகுழி விஷயத்தில் இலங்கை அரசு நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் நடந்து கொள்கிறது என எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.