தமிழகத்தில் தேர்தல் களம் நெருங்குவதை ஒட்டி, அமித்ஷா சென்ற ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்திருந்தார். நடப்பாச்சி திமுகவை எதிர்த்து இந்த தேர்தல் களம் அமைக்க சிறு கட்சிகள் முதல் பெரும்பான்மை மிக்க அதிமுக கட்சி வரை அனைத்து கட்சியையும் ஒன்று சேர்த்து எதிர்த்துப் போட்டியிட திட்டம் தீட்டியுள்ளது பாஜக. அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி, ஓபிஎஸ் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியவரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவில் அவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தென்புற மாவட்டங்களில் திமுகவை எதிர்த்து போட்டியிட இம்மூவருக்கும் நல்ல செல்வாக்கு உண்டு என்று அமித்ஷா திட்டம் தீட்டி உள்ளார். மேலும் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் பாஜகவுடன் இணைவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது. அதுமட்டுமில்லாத பாஜக சிறுபான்மையான கட்சிகள் திமுகவை எதிர்க்கும் அமைப்புகள் ஆகியவற்றையும் கூட்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவை எல்லாவற்றையும் முடித்துவிட்டு கடைசியாக விஜய்யும் பாஜக அப்ரோச் செய்ய உள்ளது. எனவே அக்கட்சியின் தொண்டர்கள் வரவிருக்கும் தேர்தல் திமுக தனித்துப் போட்டியிடும் சீமான் மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி நிலவும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தவெகவோ இதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாது தேர்தல் களப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திமுகவும் இவர்களை எதிர்க்கும் வியூகங்களை வகுத்து செயல்படுகின்றன.





