cricket: இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுக்கிடையே இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் முக்கிய வீரர்களின் விக்கெட்டை தூக்கிய வருண் சக்ரவர்த்தி.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுக்கிடையே சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இறுதி போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முக்கிய வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசி வருகிறார். இந்த போட்டியில் நியுசிலாந்து அணி டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்ய களமிறங்கியது. நியூசிலாந்து அணி முதலில் அதிரடியாக களமிறங்கி ரன் சேர்த்தனர்.
இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்து வீச வந்தார் அவர் வீசிய இரண்டாவது ஓவரில் 5 வது பந்தில் வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணியை அச்சுறுத்திய ரச்சின் இவருக்கு பின் வந்த குல்தீப் யாதவ் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். வருண் 37 வது ஓவரில் பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
தற்போது 178 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டை இழந்து இந்தி;ய அணியின் சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணி 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கும் என கூறப்படுகிறது.





