அகமதாபாத்: ஏர் இந்தியா 171 விமானவராக விபத்துக்குள்ளானது துணை விமானியே காரணம் ஆக இருக்கலாம் என விமானப்படை வல்லுநர்கள் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர். விமான விபத்திற்கு துணை விமானி தவறு காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் விமானப்படை விமானி ரியான் போடன் ஹெய்மர் தெரிவித்துள்ளார். ஏர்பஸ் 320 மற்றும் போயிங் 737 விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். விமானம் புறப்பட்ட உடனே எடுக்கப்பட்ட வீடியோக்களின் பதிவுகளின் படி, விமானம் புறப்படும் போது தரையிறங்கும் சக்கரங்கள் உள்ளே எடுக்கப்பட வேண்டும்.
பிளாக்ஸ் எனப்படும் அமைப்புகள் தாழ்வான நிலையில் இருக்க வேண்டும். விமானம் மேலே எழும்பிய சில நொடிகளில் விமானி “கியர் அப்” என்று கூறியவுடன் துணை விமானி லிவரை இழுத்து சக்கரங்களை உள்ளே இழுக்க வேண்டும். விமானத்தில் துணை விமானி தவறுதலாக ஃபிளாப்ஸை மேலே இழுத்திருக்கலாம். ஃபிளாப்ஸ் கீழே இருந்தால் தான் விமானமானது மேல் நோக்கி செல்லும்.ஃபிளாப்ஸ் மேலே இருந்தால் விமானம் ஆனது கீழ்நோக்கி செல்லும் என்று போர்டன் ஹெய்மர் தெரிவித்துள்ளார்.
விமானம் புறப்பட்டு 30 வினாடிகளுக்கு பிறகு தரையிறங்கும் சக்கரங்கள் வெளியில் இருந்தது. மேலும் பிளாக்ஸ் உள்ளே இழுக்கப்படாததால் இருக்கைகள் சமமாக இருந்ததையும் எடுத்துக்காட்டி கூறியுள்ளார். துணை விமானியின் தவறான செயலால் அல்லது ஃபிளாப்ஸ் செயல்படாமல் மேல் நோக்கி சென்று இருக்கலாம் என்றும் கூறினார். ஃபிளாப்ஸ் விரிந்த நிலையில் இருந்திருந்தால் என்ஜின்கள் வெளியே தெரியாது என்றும், அதனை சரி செய்வதற்குள் விபத்து நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
போயிங் 787 ட்ரீம் லைனர் போன்ற விமானங்களில் ஃபிளாப்ஸ் உள்ளே இழுக்கப்பட்டு இருந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். ஒலி எழுப்பப்படவில்லை என்றால் குறைபாடு என்று குறிப்பிடுகிறார் அவர். விபத்து நடந்த இடம் ஓடு பாதையில் இருந்து நேர்கோட்டு இருந்தால்தான் இரண்டு இன்ஜின்களும் பிரச்சனையிலிருந்து இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். அதனால்தான் விமானம் இடது அல்லது வலது புறம் திரும்பி இருக்கும். பறவைகள் என்ஜினில் அடிப்பது மற்றும் எரிபொருள்களில் கலப்படம் இருத்தல் போன்ற காரணங்களால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், விமானம் ஆனது பராமரிப்பு முடிந்து தான் வந்தது. எனினும் பராமரிப்பில் ஏதாவது தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.





